சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 5.5 மில்லியன் ரூபா பெறுமதியான மஞ்சள்!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 5.5 மில்லியன் ரூபா பெறுமதியான மஞ்சள்!

கற்பூரத்தை இறக்குமதி செய்யும் போர்வையில் இந்தியாவில் இருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 5.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1, 600 கிலோகிராம் மஞ்சளை சுங்கப் பிரிவு கையகப்படுத்தியுள்ளது.

குறித்த மஞ்சள் தொகை 507 பெட்டிகளில் பொதியிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெறவிருந்த 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வரி வருமானம் இழக்கப்பட்டுதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து இறக்குமதியாளருக்கு எதிராக அபராதம் விதித்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.