துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம்!

துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம்!

கொழும்பு, துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, பிரியந்த பந்துவிக்ரம, சாலிய விக்ரமசூரிய, குஷான் கொடித்துவக்கு, ஜெராட் ஒந்தச்சி மற்றும் ரொஹான் டி சில்வா ஆகியோர் துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.