முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்

முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்

நுவரெலியா - ஸ்க்ராப் சந்தியில் பார ஊர்தி ஒன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்று மதியம் இடம்பெற்ற இவ்விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த நால்வரும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.