மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

பொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் விலங்குகளுக்கு போடப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி அவர் உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பொகவந்தலாவ கீழ் பிரிவை சேர்ந்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.