நாட்டில் மேலும் 42 கொவிட் மரணங்கள் பதிவானது
நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1400 ஐக் கடந்துள்ளது.
நேற்றைய தினம் 42 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதையடுத்து கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1,405 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி, சிலாபம், பலாங்கொடை, மஸ்கெலியா, யாழ்ப்பாணம், தர்காநகர், பதுளை, ஊவா பரணகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இவைதவிர ஹொரணை, பொகவந்தலாவை ஆகிய பகுதிகளில் தலா 2 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதேநேரம் ஹற்றன், நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளில் தலா மூன்று மரணங்களும் பதிவாகியுள்ளன.
35 வயது முதல் 93 வயதுக்கு இடைப்பட்டோரின் மரணங்களே இவ்வாறு பதிவாகியுள்ளன.
10 பேரின் மரணங்கள் வீட்டில் பதிவாகியுள்ளன.
நேற்று பதிவான 42 மரணங்களில், பெரும்பாலானவை கொவிட் நியூமோனியாவினால் ஏற்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.