
நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரங்கள்
இலங்கையில் நேற்றையதினம் 2,728 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
இதன்படி நாட்டில் மொத்தமாக கொவிட் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 169,878 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம் நேற்று 28 கொவிட் 19 மரணங்களும் பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன்படி இலங்கையில் கொவிட் 19 நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,269 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட 2,728 கொவிட் தொற்றாளர்களுடன், புத்தாண்டு கொத்தணி மற்றும் திவுலுபிட்டிய, பேலியகொட, சிறைச்சாலை ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடையோரின் எண்ணிக்கை 163,471ஆக அதிகரித்துள்ளது.
அதில் 22 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் ஆவர்.
இதன்படி பேலியகொடை கொத்தணியில் 82,785 பேரும், புத்தாண்டு கொத்தணியில் இருந்து 69,240 பேரும், சிறைச்சாலை கொத்தணியில் இருந்து 5,681 பேரும், திவுலுபிட்டிய கொத்தணியில் இருந்து 3,059 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் இதுவரையில், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 4,175 இலங்கையர்கள் மற்றும் 318 வெளிநாட்டவர்களுக்கும் கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.