உள்நாட்டலுவல்கள் அமைச்சு முன்வைத்துள்ள கோரிக்கை!

உள்நாட்டலுவல்கள் அமைச்சு முன்வைத்துள்ள கோரிக்கை!

அடுத்தக்கட்ட தடுப்பூசி செலுத்தலின்போது, முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், அதுவரை எவ்வித தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டாம் என்றும் அனைத்து நிர்வாக அதிகாரிகளிடம் உள்நாட்டலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய, அடுத்தக்கட்ட தடுப்பூசி செலுத்தலின்போது, அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் மற்றும் ஏனைய கள உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று (25) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்தார்.

கொவிட் தடுப்பூசி வழங்கும் நடைமுறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.