
நேற்று அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு
நாட்டில் நேற்றைய தினம் தொற்றுறுதியான 2,971 பேரில், கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 605 பேர் பதிவாகியுள்ளனர்.
அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் 472 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 395 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரத்தனபுரியில் 223 பேரும், குருநாகலில் 171 பேரும், காலியில் 168 பேரும், மாத்தறையில் 96 பேரும், நுவரெலியாவில் 92 பேரும், மாத்தளையில் 88 பேரும், கண்டி மற்றும் பதுளையில் தலா 85 பேரும், கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் 82 பேருக்கும், ஹம்பாந்தோட்டையில் 60 பேருக்கும், கேகாலையில் 56 பேருக்கும், திருகோணமலையில் 55 பேருக்கும், கிளிநொச்சியில் 30 பேருக்கும், முல்லைத்தீவில் 22 பேருக்கும், மட்டக்களப்பில் 20 பேருக்கும், வவுனியாவில் 12 பேருக்கும்,
மன்னாரில் 10 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.