தேசிய கால்நடை பண்ணையில் கடமையாற்றும் மேலும் 32 பேருக்கு கொவிட்

தேசிய கால்நடை பண்ணையில் கடமையாற்றும் மேலும் 32 பேருக்கு கொவிட்

நுவரெலியா - டயகம சந்திரிகாமம் தோட்டத்தை அண்மித்துள்ள தேசிய கால்நடை பண்ணையில் கடமையாற்றும் மேலும் 32 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணரத்ன இதனைதெரிவித்துள்ளார்.

முன்னதாக அங்கு கடமையாற்றும் 4 தொழிலாளர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய 70 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்மையவே மேலும் 32 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொற்றுறுதியானவர்களில் நால்வர் டயகம சந்திரிகாமம் தோட்டத்தைச்சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.