பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட அனுமதி!

பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட அனுமதி!

இன்று இரவு முதல் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கும், மீன் மொத்த விற்பனையை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை மீண்டும் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.