இலங்கைக்கு மேலும் 5 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள்!
மேலும் 5 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் என இலங்கையிலுள்ள சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாத இறுதியில் 6 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றிருந்தன. இவற்றில் ஒருதொகை இலங்கையிலுள்ள சீனப் பிரஜைகளுக்கு செலுத்தப்பட்டது.
இந்நிலையில், சினோபாம் தடுப்பூசிகளை இலங்கையர்களுக்கு செலுத்த ஔடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியதன் பின்னர் கடந்த 8 ஆம் திகதி முதல் இலங்கையர்களுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.