வீடுகளில் உள்ள கொவிட் நோயாளர்களுக்கு உதவியளிக்க விசேட தொலைபேசி இலக்கம்!

வீடுகளில் உள்ள கொவிட் நோயாளர்களுக்கு உதவியளிக்க விசேட தொலைபேசி இலக்கம்!

கொவிட் தொற்றுக்கு உள்ளான நோயாளர்கள் எவரேனும், இதுவரையில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படாமல் இருந்தால், அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கு விசேட இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, இவ்வாறான நோயாளர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படுமாயின்  011 79 66 366 என்ற இலக்கத்தை அழைக்குமாறு, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 1906 அல்லது 1999 என்ற துரித எண்களையும் தொடர்புகொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெறமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.