வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பாக அரச தகவல் திணைக்களத்தின் அறிவித்தல்

வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பாக அரச தகவல் திணைக்களத்தின் அறிவித்தல்

மேல் மாகாணத்தில் வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் நாளை முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

காலாவதியாகும், வாகன அனுமதிப்பத்திரங்களுக்காக எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை எவ்வித அபராதமும் அறவிடப்பட மாட்டாது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தென் மாகாணத்தில் வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடுகள் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த காலப்பகுதியில் காலாவதியாகும் அனுமதிப்பத்திரங்களுக்காக எவ்வித அபராதமும் அறவிடப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.