வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கான நியமனம் குறித்து டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த விடயம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கான நியமனம் குறித்து டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த விடயம்

வடக்கு மாகாண சபையினால் உறுதிப்படுத்தப்படுகின்ற சுகாதார தொண்டர்களுக்கு மாத்திரமே நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறித்த தெரிவானது சேவை சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் அமையும் என நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறிப்பிட்டார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் விரிவாக ஆராயப்பட்ட நிலையில், தம்முடைய நியாயங்களை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இந்த நியமனங்களை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் இன்றிப் பல வருடங்களாக கடமையாற்றி வருகின்றனர்.

அவர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக அமைச்சரவை கூட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்ததது.

இந்நிலையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊடாக நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.