நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கைகளில் போதிய தெளிவின்மை காணப்படுகிறது - செல்வம் அடைக்கலநாதன்
நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கைகளில் போதிய தெளிவின்மை காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் பலருக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தடுப்பூசிகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஒரு நாட்டினது தடுப்பூசி செலுத்தப்பட்டவருக்கு இரண்டாம் செலுத்துகையாக ஏனைய நாடுகளின் தடுப்பூசிகள் செலுத்தப்படுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.