சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற காவல்துறையினருக்கு 758 இலட்சம் ரூபாய் வழங்க தீர்மானம்

சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற காவல்துறையினருக்கு 758 இலட்சம் ரூபாய் வழங்க தீர்மானம்

திர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், பதாதைகள், அறிவித்தல் பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்றுவதற்காக காவல்துறையினருக்கு 758 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பிலான கலந்துரையாடல் கடந்த 3ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றுள்ளதோடு, இதில் பதில் காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட பொதுத்தேர்தலுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறைமா அதிபரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த விளம்பர பலகைகளை அகற்றுவதற்காக மேலதிகமாக 1,500 தொழிலாளர்கள் காவல் நிலையங்களில் நிறுத்தப்படவுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது