கொரோனா உறுதியான டோனியின் பெற்றோருக்கு ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,56,16,130 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,023 பேர் கொரோனா பாதிப்பினால் மரணம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனியின் தாய், தந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
கொரோனா உறுதியான டோனியின் பெற்றோருக்கு ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.