5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கலில் இருந்து பின்வாங்கும் அரச ஊழியர்கள் (காணொளி)

5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கலில் இருந்து பின்வாங்கும் அரச ஊழியர்கள் (காணொளி)

சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்டுள்ள தரப்பினருக்கு வழங்கப்படவுள்ள 5,000 ரூபாய் நிவாரண கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கையில் இருந்து விலகுவற்கு கிராம சேவகர்கள், அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி வங்கி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

கொவிட்-19 பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் உள்ளிட்ட 7 தரப்பினருக்கு தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு 5,000 ரூபாய் நிவாரண கொடுப்பனவை வழங்குமாறு அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் நேற்றைய தினம் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும்  5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கையில் இருந்து விலகவுள்ளதாக கிராம சேவகர் சங்கத்தின் தவிசாளர் சுமித் கொடிக்கார தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை, இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவிடம் வினவியது.

இதற்கு பதில் வழங்கிய அவர், அரசாங்கம் தீர்மானத்துள்ளமைக்கு அமைய நாளைய தினம் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்டுள்ள தரப்பினருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டார்