பிரான்ஸில் கெரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிரான்ஸில் கெரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிரான்ஸில் கொவிட் 19 தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 5,273 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களை காட்டிலும் நேற்றைய தினம் 19 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேநேரம், வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரான்ஸில் உள்ள பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் நோக்கில் நாட்டை முடக்காமல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரன் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இதனால் அங்கு பாரிய தொற்று பரவல் ஏற்படுவதற்கான காரணியாக இது அமைந்துள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது