மொசாம்பிக்கியுவின் பல்மா நகர்ப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொசாம்பிக்கியுவின் வடக்கு பகுதியிலுள்ள பல்மா நகர்ப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள உணவகம் ஒன்றிலிருந்து வெளியேற முயற்சித்த 7 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அங்கிருந்து நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகளும் வெளிநாட்டவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் கடந்த புதன்கிழமை முதல் பயங்கரவாதிகளால் தாக்குல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் குறித்த பகுதியிலுள்ள மக்கள் படகுகள் மூலம் அங்கிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்