ஆடவர் உயரம் பாய்தல் போட்டியில் உஷான் திவங்க சாதனை

ஆடவர் உயரம் பாய்தல் போட்டியில் உஷான் திவங்க சாதனை

ஆடவர் உயரம் பாய்தல் போட்டியில் 16 வருடங்களுக்கு பின்னர் தேசிய சாதனையை 22 வயதான உஷான் திவங்க பெரோரா முறியடித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸில் இடம்பெற்று வரும் மெய்வல்லுனர் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதற்கமைய, ஆடவர் உயரம் பாய்தல் போட்டியில் 2.28 மீற்றர் உயரத்தை அவர் பாய்ந்து இந்த சாதனையை பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு மஞ்சுள குமார 2.27 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனை படைத்திருந்தார்.

அத்துடன் 2005 ஆம் ஆண்டும் அவர், அதே உயரத்தை மீண்டும் பாய்ந்து தமது சாதனையை சமப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது