பசறை விபத்து இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு வேலியமைக்க நடவடிக்கை (படங்கள்)
லுணுகலை – பதுளை வீதியில், பசறை – 13ஆம் கட்டையில் ஏற்பட்ட கோர விபத்தின் பின்னர் தற்போது அந்த பகுதியில் பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வீதியின் நிர்மாண பணிகளை முன்னெடுக்கும் நிறுவனத்தினால் இரும்பு கம்பிகளை கொண்டு குறித்த பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த வீதியில் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக வேகத் தடையும் அமைக்கப்பட்டு வருகின்றது.
எனினும் வீதியை மறிக்கும் வகையில் வீழ்ந்துள்ள பாறையை அகற்றுவதற்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார். .




