சமூக ஊடகங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

சமூக ஊடகங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

சமூக ஊடகங்களை கண்காணிப்பதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்கு பவ்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது.

சமூக ஊடகங்களில் தேர்தல் தொடர்பில் வெளியாகும் உரைகள், பொய்யான தகவல்கள், மத சமூக விடயங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்துவது போன்றவற்றை கண்காணிக்கவுள்ளதாக பவ்ரல் தெரிவித்துள்ளது.

கரிசனைக்குரிய சமூக ஊடக பதிவுகளை ஆராய்ந்த பின்னர் அவற்றை தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக பவ்ரல் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்த பின்னர் முகநூல் போன்ற உரிய நிறுவனங்களின் கவனத்திற்கு அவற்றை கொண்டுவரவுள்ளதாக பவ்ரல் தெரிவித்துள்ளது.

இவ்வாறான விடயங்கள் குறித்து துரித நடவடிக்கையை எடுப்பதற்கு முகநூல் இணங்கியுள்ளதாகவும் பவ்ரல் தெரிவித்துள்ளது.

தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவத்துவதற்காக 3000 கண்காணிப்பாளர்களிற்கான பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பவ்ரல் தெரிவித்துள்ளது.