கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்
நேற்று அடையளாம் காணப்பட்ட 304 தொற்றாளர்களுள் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்று 75 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் காலியில் 49 பேருக்கும் கம்பஹாவில் 43 பேருக்கும் கண்டியில் 19 பேருக்கும் நேற்று தொற்றுறுதியாகியுள்ளது.
இதுதவிர இரத்தினப்புரியில் 11 பேருக்கும் வவுனியா மற்றும் மாத்தளையில் தலா 10 பேருக்கும் முல்லைத்தீவில் 8 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் தலா 6 பேருக்கும் மட்டக்களப்பில் 5 பேருக்கு தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் 86 ஆயிரத்து 989 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் 83 ஆயிரத்து 561 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் தொற்றுறுதியான 2 ஆயிரத்து 908 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்ட மூவாயிரத்து
346 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் மூவாயிரத்து 300 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் நாட்டில் கொவிட்-19 தாக்கம் தொடர்ந்தும் காணப்படுவதாகவும் இது தொடர்பில் அவதானமாக செயற்பாடுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்