நாயாற்றுப் பாலத்திற்குள் பாய்ந்த வாகனம்!

நாயாற்றுப் பாலத்திற்குள் பாய்ந்த வாகனம்!

வெலிஓயாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து முல்லைத்தீவு நாயாற்றுப் பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வெலிஓயாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற மகேந்திரா ரக் வாகனம் வேகக்கட்டுப்பட்டை இழந்து முல்லைத்தீவு நாயாற்று பாலத்திற்குள் பாய்ந்துள்ளது.

இச் சம்பவத்தில் குறித்த வாகனத்தில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் பிள்ளையும் காயமடைந்துள்ளார்கள். வாகன சாரதியான தந்தை எவ்வித காயங்களும் இன்றி உயிர்பிழைத்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பாெதுமக்கள், இராணுவத்தினரின் உதவியுடன் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அதிவேகம் காரணமாகவே வாகனம் நாயாற்று பாலத்திற்குள் பாய்ந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.