கினிய இராணுவ தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 17 பேர் பலி

கினிய இராணுவ தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 17 பேர் பலி

மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் (Guinea) உள்ள இராணுவ தளம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

பேட்டா பகுதியில் உள்ள இந்த இராணுவ தளத்தில் டைனமைட் என்ற வெடிபொருள் திடீரென தொடர்ச்சியாக வெடிக்கத் தொடங்கியுள்ளது.

சக்திவாய்ந்த இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக கினிய ஜனாதிபதி டியோடோரா ஓபியாங் கருத்து தெரிவிக்கையில், டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தும்போது பாதுகாப்பு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என தெரிவித்திருந்தார்