மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்த நடவடிக்கை

மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்த நடவடிக்கை

கடல் வேளாண்மையை மட்டுமல்லாது, நில வேளாண்மையையும் மேம்படுத்தி, மக்களது வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான பணிகளை பாரபட்சமின்றி தாம் முன்னெடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தள்ளார்.

வேலணையில் உள்ள கட்சியின் பிராந்திய அலுவலகத்தில், கட்சியின் பொறுப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை இன்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தங்களது ஆட்;சிக் காலப்பகுதியில், கடல் மற்றும் நில வேளாண்மை உள்ளிட்ட துறைகள் மட்டுமல்லாது ஏனைய தொழில்சார் பேட்டைகளையும் உருவாக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனூடாக தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த தொழில் வாய்ப்பு ஏற்படும்.

அவ்வாறே, தீவக பகுதியிலும் கடல் மற்றும் நில வேளாண்மையை மக்களிடையே அதிகளவில் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்