நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு - மக்கள் வெளியேற்றம்

நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு - மக்கள் வெளியேற்றம்

நியூஸிலாந்தில் 7.3 ரிச்டெர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இயடுத்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் (PTWC)தெரிவித்துள்ளது.

கிஸ்போர்ன் நகரிலிருந்து வடகிழக்கில் 180 கிலோமீட்டர் (111 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் நியூஸிலாந்து நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2:27 மணிக்கு (13.27 GMT) ஏற்பட்டுள்ளது.

இதனால் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கி.மீ தூரத்திற்குள் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் கேப் ருனாவே முதல் டோலாகா பே வரை கடற்கரைக்கு அருகில் உள்ளவர்கள் அருகில் உள்ள உயரமான மைதானத்திற்கு உடனடியாக செல்ல வேண்டும்.

சிவில் பாதுகாப்பு அதிகாரப்பூர்வமாக தெளிவான செய்தி கொடுக்கும் வரை திரும்பி வர வேண்டாம் "என்று நியூசிலாந்தின் தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.