கொழும்பு நகரில் ஒக்ஸிசனின் அளவு குறைந்து வருவது கண்டுபிடிப்பு

கொழும்பு நகரில் ஒக்ஸிசனின் அளவு குறைந்து வருவது கண்டுபிடிப்பு

கொழும்பு நகரத்தின் வளிமண்டலத்தில் ஒக்ஸிசனின் அளவு வீதம் படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய ஆய்வின் தகவல்கள் இதை தெரிவிப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இதை அமைச்சர் மஹிந்த அமரவீர இதை குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் அமைச்சகம் கொழும்பு மாநகரசபை மன்றத்துடன் இணைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மரம் நடும் திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.

கொழும்பு நகரில் ஒக்ஸிசனின் பரிசோதனை திட்டத்தை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு நகரசபை பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு தேவையான நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு கொழும்பு மேயரஸ் ரோஸி சேனாநாயக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.