முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி

முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான முதலாவது முதலாவது இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

கூலிஜ்ஜில் (Coolidge) இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகூடுதலாக 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாய மேற்கிந்திய தீவுகள் அணி 13.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது