இன்று அதிகாலை கைதான விசேட அதிரடிப்படை வீரர்
கஞ்சா கடத்திச் சென்றவிசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கல்லாறு பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொத்துவிலில் இருந்து அனுராதபுரத்திற்கு மோட்டர்சைக்கிளில் கஞ்சாவை கடத்திச் கென்றவேளை இவர் அகப்பட்டார்.அவரிடம் இருந்து 215 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான இன்று அதிகாலை களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லாறு பொலிஸ் வீதி சோதனைச்சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பொத்துவில் அறுகம்பை விசேட அதிரடிப்படை முகாமில் கடமையற்றும் அனுராதபுரத்தைச் சேர்ந்த வீரர் விடுமுறையில் மோட்டர்சைக்கிளில் வீடு செல்லும் போது கஞ்சாவை கடத்திச் சென்ற நிலையில் பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து அவரை பொலிஸார் கைது செய்தனர்.
அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினமும் இராணுவ அதிகாரி மற்றும் படையிலிருந்து தப்பியோடிய ஒருவர் ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.