பாவனைக்கு உதவாத வாகனங்களை கடலில் மூழ்கடிக்கும் செயல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று

பாவனைக்கு உதவாத வாகனங்களை கடலில் மூழ்கடிக்கும் செயல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று

மீன் பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் பாவனைக்கு உதவாத வாகனங்களை கடலில் மூழ்கடிக்கும் செயல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் காலியில் இன்று இடம்பெற்றது.

கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் இதற்கான நிகழ்வு இன்று இடம்பெற்றதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதற்கமைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாவனைக்கு உதவாத சில பேருந்துகள் இன்று கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

காலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து 13 கிலோமீற்றர் தொலைவில் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் கொண்டு செல்லப்பட்டு குறித்த பேருந்துகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக எமது தொடர்பாளர் தெரிவித்தார்