இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது.
கட்சித் தலைவரான, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில், வவுனியா குருமன்காட்டில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று முற்பகல் 10.30 அளவில் இந்தக் கூட்டம் ஆரம்பமாகியிருந்தது.
ஜெனிவா விவகாரம், புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இன்று ஆராயப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்