சகல அரச நிறுவன வாகனங்கள் தொடர்பான தகவல்களை புதுப்பிக்க நிதியமைச்சு தீர்மானம்

சகல அரச நிறுவன வாகனங்கள் தொடர்பான தகவல்களை புதுப்பிக்க நிதியமைச்சு தீர்மானம்

அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் சகல வாகனங்கள் தொடர்பான தகவல்களை புதுப்பிப்பதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது

நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல இதனை எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.

குறித்த வாகனங்கள் தொடர்பான தகவல்களை அடுத்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு சகல அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களிலும் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்