ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது நிறைவாண்டு எதிர்வரும் மார்ச் 15ல்

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது நிறைவாண்டு எதிர்வரும் மார்ச் 15ல்

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது நிறைவாண்டை எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் 15ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு ஹைட்பாக் மைதானத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்