தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகும் பொது சுகாதார பரிசோதகர்கள்

தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகும் பொது சுகாதார பரிசோதகர்கள்

இன்று முதல் அமுலாகும் வகையில், கம்பஹா மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகுவதற்கு மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

தடுப்பூசி வழங்குவதற்கான மத்திய நிலையங்களின் எண்ணிக்கையை இன்று முதல் குறைப்பதற்கு சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அந்த சங்கத்தின் தலைவர் சமிந்த சமர திவாகர தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில், 200 முதல் 225 மத்திய நிலையங்களின் மூலமாக கிராம சேவகர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம், சுகாதார அமைச்சின் தவறான தீர்மானத்தின் காரணமாக, 70 முதல் 80 மத்திய நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த வேலைத்திட்டத்தை பொதுமக்கள் மத்தியில் கொண்டுசென்று, தலைவர்களுக்கு அறியப்படுத்தி, அரச அதிகாரிகளை தெளிவுபடுத்தி, இடங்களை தெரிவுசெய்து அனைத்து நடவடிக்கைகளும் தயார்ப்படுத்தப்பட்டிந்தன.

எனினும், மத்திய நிலையங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையினால், அவர்களுக்கு பதிலளிக்க முடியாத நிலை பொது சுகாதார பரிசோதகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், இன்று காலை முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்