மாளிகாவத்தை, கிராண்ட்பாஸ் பகுதிகளில் 1500 பேருக்கு கொவிட் தடுப்பூசி

மாளிகாவத்தை, கிராண்ட்பாஸ் பகுதிகளில் 1500 பேருக்கு கொவிட் தடுப்பூசி

கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படவேண்டிய அனைவருக்கும், அதனை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநாகர சபை பகுதியில் உள்ளவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தும் வேலைத்திட்டத்தின்கீழ், கொவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கை இன்றும் சில மையங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை, கிராண்ட்பாஸ், ஸ்டேஸ்புர முதலான பகுதிகளைச் சேர்ந்த, 30 வயதிற்கு மேற்பட்ட 1,500 பேருக்கு தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களில் நெரிசல்களை ஏற்படுத்திக்கொள்ளாத வண்ணம் பொதுமக்கள், தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கோரியுள்ளார்