உடன் அமுலாகும் வகையில் சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி

உடன் அமுலாகும் வகையில் சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி

நுவரெலியா - பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகார பிரிவின் செப்பல்டன் தோட்டத்தின் பி.எஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

பொகவந்தலாவை - செப்பல்டன் பூசாரி தோட்டம் பகுதிக்கு நேற்றைய நாளில் நடமாட்டத்தடை விதிக்கப்பட்டிருந்தது.

செப்பல்டன் பூசாரி தோட்டம் மற்றும் செல்வகந்தை ஆகிய பகுதிகளில் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது