இந்தியாவில் 1.2 கோடி சுகாதார, முன்னிலைப் பணியாளர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள்
இந்தியாவில் 12,300,000ற்கும் அதிகமான சுகாதார மற்றும் முன்னிலை பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நேற்றுவரை 263,224 மையங்களில் இந்தத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
6,500,000ற்கும் அதிகமான சுகாதார பணியார்களுக்கு முதல் முறை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதுடன், 1,400,000ற்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு இரண்டாவது முறையும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், 43,000ற்கும் அதிகமான முன்னிலைப் பணியாளர்களுக்கு முதலாவது முறையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.