
வார இறுதி நாட்களிலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பேணுமாறு அறிவுறுத்தல்
வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய பொதுமக்கள் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை மற்றும் முகக்கவசம் அணியாதமை தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, கடந்த ஒப்டோபர் மாதம் 30 திகதி முதல் தற்போது வரையில் குறித்த விடயங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,233 ஆக அதிகரித்துள்ளது