இலங்கை குறித்த அறிக்கை ஜெனீவா மாநாட்டில் முன்வைப்பு
இலங்கையின் பொறுப்புகூறல் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது மாநாட்டில் சற்று முன்னர் முன்வைக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலெட்டினால் இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த அறிக்கை வெளியாகி இருந்த நிலையில் இன்று உத்தியோகபூர்வமாக இந்த அறிக்கை மாநாட்டில் அவர் முன்வைத்தார்.
இதனைத்தொடர்ந்து நாளைய தினம் இந்த அறிக்கை தொடர்பான தமது நிலைப்பாடுகளை உறுப்பு நாடுகள் வெளியிடவுள்ளன