சிக்கல்கள் இருப்பதை ஒப்புக்கொண்டார் அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே

சிக்கல்கள் இருப்பதை ஒப்புக்கொண்டார் அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே

சில தரப்பினரால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள் காரணமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் முறையில் சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே ஒப்புக்கொண்டுள்ளார்.

முதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

எனினும் சுகாதார வழிகாட்டுதல்களை மீறி அரசாங்கத்தின் சில பிரிவுகளுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்படுகிறதாக முன்னணி சோசலிஸ கட்சியின் உறுப்பினர் புபுது ஜாகொட கூறுகிறார்.

மேலும் தடுப்பூசி பட்டியலில் உள்ளவாறு அல்லாமல் தடுப்பூசி வழங்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சில தரப்பினரால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள் காரணமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் முறையில் சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், எதிர்காலத்தில் அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் என சுகாதார சேவைகள் துணை இயக்குநர் டாக்டர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது