ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது - சமல் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது - சமல் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை - நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுனவின் பிரதான காரியாலயத்தின் புதிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் நிர்மானப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதனை அடுத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கான சக்தி தங்களுக்கு கிடைக்கும் எனத் தாம் பிரார்த்திப்பதாகவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்