பொகவந்தலாவையில் ஒரு பகுதிக்கு நடமாட்டத்தடை

பொகவந்தலாவையில் ஒரு பகுதிக்கு நடமாட்டத்தடை

பொகவந்தலாவை - செபெல்டன் பூசாரி தோட்டம் பகுதிக்கு நடமாட்டத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

செபெல்டன் பூசாரி தோட்டம் மற்றும் செல்வகந்தை ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் கதிர்வேல் ஜெயகணேஸ் இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரையில் 115 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.