இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் இன்று

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் இன்று

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் இன்று இடம்பெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 85 வாக்களிப்பு நிலையங்களில் இந்த தேர்தல் இடம்பெறவுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தவிசாளர் பதவிக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான குவேர டி சொய்சா மற்றும் சாலிய பீரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு சுகாதார வழிமுறைகளுக்கமைய இந்த தேர்தல் இடம்பெறவுள்ளது.

வாக்காளர்களுக்காக கொழும்பு நீதிமன்றத்திற்குள் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மூன்று வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

எனவே நீண்ட வரிசையில் காத்திருக்காது வாக்களிக்க முடியும் என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது