அரிசி மோசடி கும்பலை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்
மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை அரசாங்கம் இருப்பில் வைத்திருப்பதன் மூலம் அரிசி மோசடி கும்பலை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இந்தப் பருவத்தில் நெல் கொள்வனவுக்காக அரசாங்கம் 23,000 மில்லியன் ரூபாவை . ஒதுக்க்கியுள்ளதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் சுட்டிக்காட்டினார் .
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,நெல் களஞ்சியப்படுத்துவதற்காக 323 புதிய களஞ்சியசாலைகளை புனரமைத்துள்ளோம்.. இதில் 325.000 இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கான வசதி காணப்படுகின்றது .
அத்துடன் உரம் .நீர். காப்புறுதி மற்றும் தொழில்நுட்பத்தையும் அரசாங்கம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குகின்றது. இவ்வாறு பயிரிடுகின்ற விவசாயிகளின் நெல்லை குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்வதை தடுப்பதற்காகவும், விவசாயிகளையும், வாடிக்கையாளர்களையும் அரிசி மாபியாவிலிருந்து பாதுகாப்பதற்காகவும் நெல்லிற்கான உத்தரவாத விலையொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வரலாற்றிலேயே ஆகக்கூடிய நெல் அறுவடை இந்த பருவத்தில் இடம்பெற்றுள்ளது. இது 32 இலட்சம் மெட்ரிக் தொன்னாக பதிவாகியுள்ளது. இந்த வருடத்தில் 5 மில்லியன் மெட்ரிக் தொன் நெல்லை உற்பத்தி செய்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதிலிருந்து பெறப்படும் அரிசியின் அளவு 3 மில்லியன் மெட்ரிக் தொன்களாகும்.
நாட்டின் வருடாந்த அரிசி நுகர்வு 25 இலட்சம் மெற்றிக்தொன் என்பதுடன், இவ்வருடம் அதிகமாக 5 லட்சம் மெட்ரிக் தொன் அரிசி எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.