பொந்தலையில் நான்கு கோழிகளை திருடிய நபர் ஒருவர் கைது
பொந்தலை பிரதேசத்தில் நான்கு கோழிகளை திருடிய நபர் ஒருவர் நேற்று (21) இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் பொந்தலை- அந்துரத்வில பிரதேசத்தை சேர்ந்நவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொந்தலை- வல்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் அண்மையில் தனது 2500 ரூபா பெறுமதியான நான்கு கோழிகளை திருடியுள்ளதாக காவல்துறையினரிடம் அளித்த முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை இன்று (22) காலி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்