கொரோனா தொற்றினால் ஹட்டனில் ஒரு மரணம் பதிவு!
நாட்டில் மேலும் 10 கொவிட் 19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி நாட்டில் இதுவரை கொவிட் 19 என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 445 ஆக உயர்வடைந்துள்ளன.
கொலன்னாவை பகுதியை சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுறுதியானது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
கொவிட் 19 நிமோனியா,மோசமடைந்த ஈரல் நோய் என்பன அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவருக்கு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அதன்பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியாவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை பகுதியை சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர் கடந்த 16 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுடன் குருதி விசமானமை, இதய நோய், தீவிர நீரிழிவு நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வஸ்கடுவை பகுதியை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 16 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.
கொவிட்19 நிமோனியா, குருதி விசமானமை, உயர் குருதி அழுத்தத்தால் ஏற்பட்ட இதய நோய் என்பன அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிபிலை பகுதியை சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவர் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்தார்.
மூளையில் ஏற்பட்ட குருதி கசிவு மற்றும் கொவிட் 19 இனால் ஏற்பட்ட சுவாச தொகுதி கோளாறு காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குருத்தலாவை பகுதியை சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவருக்கு பதுளை போதனா வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கொவிட்19 நிமோனியா, இதய நோய், நீரிழிவு நோய் என்பன அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிட கோட்டே பகுதியை சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுபதிக்கப்பட்ட போது கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட் 19 நிமோனியா, மூச்சிழுப்பு, நீரிழிவு அவரது மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடால்கமுவ பகுதியை சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர் குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட் 19 நிமோனியா, குருதி விசமானமை, சிறுநீரக நோய் என்பன அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரத்மலானை பகுதியை சேர்ந்த 90 வயதுடைய ஆண் ஒருவர் குருணாகல் ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட் 19 தொற்றுறுதியாகிருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவர் பிம்புர ஆதார வைத்தியசாலையில் மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கொவிட்19 நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பகுதியை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவர் தேசிய தொற்று நோயியல் நிருவனத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கொவிட் 19, தீவிர நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், மூலைக்களங்கள் இறந்தமை என்பன அவரது மரணத்திற்கான காரணமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது