அரசாங்கம் நாட்டின் வளங்களை விற்பனை செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது - சஜித் குற்றச்சாட்டு

அரசாங்கம் நாட்டின் வளங்களை விற்பனை செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது - சஜித் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் மோசடி மற்றும் நாட்டின் வளங்களை விற்பனை செய்யும் செயற்பாடுகளையே முன்னெடுத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.

சூரியவௌ பகுதியில் இன்று இடம்பெற்ற நடமாடும் செயற்திட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரிகள் கைது செய்யப்படுவார்கள் என அறிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சியமைத்தது.

இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்யவில்லை என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையே கூறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் நாட்டின் வளங்களை விற்பனை செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு வாழ்க்கையை கொண்டு செல்வதற்கான நிலை இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.