மினுவாங்கொடையில் ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

மினுவாங்கொடையில் ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

மினுவாங்கொடை பத்தண்டுவன பகுதியில் ஆயுதங்கள், தோட்டக்கள் மற்றும் வாகன தகடுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மினுவாங்கொடை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய அவரது இல்லத்தை சோதனையிட்ட போது அவை மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது இரட்டை குழல் 12 ரக துப்பாக்கி ஒன்று, 16 தோட்டாக்கள், 3 வாள்கள், 9 மில்லிமீற்றர் ரக தோட்டக்கள் 9 உள்ளிட்டவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரிடம் மேலும் ஆயுதங்கள் காணப்பட்டதாக என்பது தொடர்பில் காவல்துறையினர் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்